மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் நேற்றைய தினம் 326 பேருக்கு றெபிட் எண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளபபட்டுள்ளன.
இவற்றில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேவேளை , மேல் மாகாணத்திற்கு வெளியே முகக்கவசம் அணியாமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.
அந்த நிலையில், பொதுமக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கோரியுள்ளார்.

No comments
Thanks for reading….