இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஞானசார தேரருக்கு விசேட பாதுகாப்பு? நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

tamilsolution_ad_alt

 

கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பான வழக்கில் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றில் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஞானசார தேரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவர் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவர் ஆச்சிரமம் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் சட்டத்தரணிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலும் ஞானசார தேரருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இதனடிப்படையில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் காலத்திலும் அவருக்கு தேவையான விசேட பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கருத்தில் கொண்ட மேலதிக நீதவான், ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிடியாணை தொடர்பில் நாளை அவரை அங்கு முன்னிலைப்படுத்தவும், கொழும்பு மேல் நீதிமன்ற பிடியாணை தொடர்பில் நாளை மறுதினம் அங்கு முன்னிலைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.