அல் ஹிக்மா பாடசாலையின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடி, நான்காவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு பாராட்டுக்குரிய சாதனையைப் படைத்துள்ளது. அணியின் மொத்த ஆட்டமும் சிறப்பாக அமைந்ததோடு, குறிப்பாக அணித்தலைவர், உபத்தலைவர் மற்றும் இன்னும் சில வீரர்களின் ஆட்டம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
இந்தக் குறுகிய காலத்தில் திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்ததோடு, அணியை பயிற்றுவித்த பயிற்சியாளர் சகோதரர் அஸ்கர், தற்போதைய MIC இல்யாஸ் ஆசிரியர், முன்னாள் MIC லோரன்ஸ் ஆசிரியர், மற்றும் பாடசாலை அதிபர் ரஷாட் (நலீமி) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த பாராட்டுவிழா கடந்த 2025/09/28 ஞாயிறு மாலை, அல் ஹிக்மா பாடசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் அதிதியாக வத்தேகம உதவி கல்வி பணிப்பாளர் கௌரவ A. ரஹீம் அவர்கள் பங்கேற்றார். மேலும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் அபால்தீன் இக்ராம், கௌரவ அதிதிகளாக M. H. M. அனீஸ் மற்றும் M. H. M. ஹனீப் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், கும்புக்கந்துரை KPL குழுவினரால், கிரிக்கெட் வீரர்களுக்கு சுமார் ரூ. 250,000 பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் அனுசரணையாளர்களின் மூலம் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வை அல் ஹிக்மா கிரிக்கெட் அபிவிருத்திக் குழு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments
Thanks for reading….