Digana Welfare Forum Qatar (DWF Qatar) அமைப்பின் ஏற்பாட்டில், 2026 மே 28 ஆம் திகதி நடைபெற்ற ஹஜ் யூனிட்டி கேதரிங் 2026 நிகழ்வு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் திகன, கும்புக்கந்துர, ஹிஜ்ராபுர, அம்பகஹலந்த, கெங்கள்ல மற்றும் பலகொல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த கட்டார்வாழ் DWF Qatar உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
உறுப்பினர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மகிழ்ச்சியான சந்திப்புகள், பயனுள்ள கலந்துரையாடல்கள் மற்றும் பரஸ்பர அறிமுகங்களுடன் நடைபெற்றது. நீண்ட காலமாக சந்திக்காத உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சந்தித்து உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
மேலும், சமூக ஒற்றுமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. உறுப்பினர்களின் உற்சாகமான பங்கேற்பும் ஒத்துழைப்பும் நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இறுதியாக, அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்து, Digana Welfare Forum Qatar சமூகத்தின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும் உறுதியுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
ஏற்பாட்டுக் குழு சார்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் ஜஸாகல்லாஹு கைரன். அல்லாஹ் உங்கள் அனைவரின் பங்களிப்புகளையும் நற்கூலியாக ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்.
- DIGANA WALFARE FORUM QATAR
www.dwfqatar.com


No comments
Thanks for reading….