இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி

tamilsolution_ad_alt


இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 37 ஒட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு 125 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 30 ஒட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 24 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 126 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இலந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பாக அணித்தலைவர் டிம் சௌத்தி ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இலங்கை அணி சார்பில், அணித்தலைவர் லசித் மாலிங்க 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்போது, தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தி இருபதுக்கு இருபது போட்டி வரலாற்றில் புதிய சாதனையை லசித் மாலிங்க நிலை நாட்டியுள்ளார்.

அதேபோல், இன்றைய போட்டியில் தனது 100 வது விக்கட்டை வீழ்த்தி மற்றுமொரு சாதனையையும் லசித் மாலிங்க படைத்துள்ளார்.

அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

எவ்வாறாயினும், ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றுள்ளதால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
Theme images by suprun. Powered by Blogger.