இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சமாதான நீதவான்கள் கெளரவிப்பில் மௌலவி முனீர் சாதிக்கிற்கும் விருது.

tamilsolution_ad_alt

இவ்விருதை பொருத்தளவில் இது இலங்கையில் 5 நபர்களுக்கும் உலகத்தில் 50 பேருக்கு மாத்திரமே ஒரு வருடத்தில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகைளில் சமாதான மற்றும் சமூக சேவை பணிகளில் தங்களை அர்ப்பணித்து செயற்படும் சமாதான நீதிவான்களுக்கு கௌரவம் அளிக்கும் நிகழ்வு (இலங்கை சமாதான நீதிவான்கள்பேரவயைின் )அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.எம் பௌசில் தலைமையில் நேற்று ஞாயிறு 24.11.2019 மாலை 3.00 மணிக்கு அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் கலந்து கொண்டார்.
நிகழ்வில் அம்பாறை மாவட்ட சமாதான நீதிவான்களுக்கு கீர்த்தி ஸ்ரீ விருதுகள் அவர்களின் பணிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமேரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைகள் சமாதானத்திற்கான ஆணையகத்தினால் 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையைச் சேர்ந்த நாட்டுக்காக சிறந்த சேவை செய்யக்கூடிய சமாதான நீதவான்களுக்கு கிடைத்த 5விருதில்

peace excellence Award 2019
கீர்த்தி ஶ்ரீ,தேச கீர்த்தி,தேச சக்தி,தேச அபிமானி ஆகிய கௌரவிப்பு பட்டங்கள்
பேரவையின் கண்டி மாவட்ட பணிப்பாளர் அகில இலங்கை சமாதான நீதவான்,
 கண்டி தெல்தோட்டை பல்லேகமை யைச்சேர்ந்த
அஷ்ஷெய்க் முனீர் சாதிக் அவர்களுக்கும் பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

இவர் கண்டி பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் மூத்த சிரேஷ்ட உறுப்பினர் அல் ஹாஜ் சாதிக் அவர்களின் புதல்வருமாவார்.



Theme images by suprun. Powered by Blogger.