குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கேடே, தித்தவெல்கால ஆகிய பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கும்புக்கேடே பொது சுகாதார வைத்திய அதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார்.கடந்த 16ம் திகதி முதல் இந்த பகுதி முடக்கப்பட்டதாகவும், முடக்க நிலைமையை தளர்த்துவதற்கான தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் நடத்தப்பட்ட 97 பி.சி.ஆர் பரிசோதனைகளில், 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 29 பேர், தித்தவெல்கால பகுதியைச்; சேர்ந்தவர்கள் என அவர் கூறுகின்றார்.
அதனாலேயே, குறித்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வெளியாவதை அடிப்படையாகக் கொண்டே எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
KUMBUKKANDURA NEWS


No comments
Thanks for reading….