ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பலருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இணைந்துகொண்டுள்ளார்.
நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பு ப்ளெவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவுக்கு கொண்டு செல்லும் சூழலை உருவாக்குவது நாட்டு மக்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் விரைவான பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதே தனது குறிக்கோளாக இருந்ததாகவும், தற்போது அது எட்டப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொழிற்சங்க அமைப்பின் 37வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையே நெருக்கடியிலிருந்து மீள ஒரே வழி எனவும் அந்த உடன்படிக்கை காரணமாக மூலம் இலங்கைக்கு தற்போது குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
KBKNEWS MEDIA


No comments
Thanks for reading….