தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு - வவுணதீவு காயங்குடா பகுதியில் உள்ள தனியார் காணி பகுதியில் இன்று (29) அகழ்வு பணி இடம்பெற்றது.
நீதிமன்ற உத்தரவை பெற்று இந்த அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு அகழ்வு பணியை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதி பெறப்பட்டிருந்தது.
மண் அகழ்வு இயந்திரத்தை பயன்படுத்தி அகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன் போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்பார்வையின் கீழ் அகழ்வு பணி காலை 9 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட போதிலும் எந்தவொரு பொருளும் மீட்கப்படவில்லை.
இதை அடுத்து அழ்வு பணி நிறுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments
Thanks for reading….