எமது ஊரைச் சேர்ந்த ஸலாஹுதீன் முஹம்மத் பர்ஸான் அவர்கள் பொறியியல் துறையில் தனது உயர்கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து பொறியியலாளராக பட்டம் பெற்றுள்ளார். இது அவரது குடும்பத்தினருக்கே மட்டுமன்றி, முழு பகுதி மக்களுக்கும் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, எமது பகுதியில் ஆண் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் சூழலில், இவ்வாறான சாதனை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
இவரின் கல்விப் பயணத்தின் முக்கிய அடைவாகிய பொறியியல் உயர் தேசிய டிப்ளோமா பட்டமளிப்பு விழா கடந்த 20.05.2026 அன்று கொழும்பு BMICH மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பகஹலந்தையைச் சேர்ந்த ஹலீல் ஸலாஹுதீன் – ஸரீனா பேகம் தம்பதிகளின் இளைய புதல்வரான இவர், தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை வ/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 01 முதல் 10 வரை கற்றதுடன், பின்னர் மா/அல்பதுரியா மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியை தொடர்ந்தார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற இவர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 8A மற்றும் 1B பெறுபேறுகளுடன் தேர்ச்சி பெற்று கணிதப் பிரிவில் உயர்தரக் கல்வியை மேற்கொண்டார்.
கல்வியுடன் இணைந்து மார்க்கக் கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர், அம்பகஹலந்த அல்மனார் மத்ரஸாவின் பகுதி நேர ஹிப்ழ் பிரிவில் கல்வி கற்று, அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் கொழும்பில் அமைந்துள்ள Denscoth Engineering நிறுவனத்தில் Project Engineer ஆக பணியாற்றி வருகிறார்.
இவரின் எதிர்கால கல்வி, தொழில் மற்றும் சமூகப் பணிகள் மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.


No comments
Thanks for reading….