இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அனுமதியின்றி பெண்ணின் முகத்தை AI Deepfake செய்த ஊடகத்திற்கு கத்தார் நீதிமன்றம் 1 லட்சம் ரியால் அபராதம் விதிப்பு!

tamilsolution_ad_alt

 


கத்தாரில் பெண்ணொருவரின் அனுமதியின்றி அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலி செய்தி வாசிப்பாளரை (Deepfake) உருவாக்கிய பிரபல செய்தி ஊடகத்திற்கு 1,000,000 (ஒரு லட்சம்) கத்தார் ரியால் இழப்பீடு வழங்குமாறு கத்தார் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.


பாதிக்கப்பட்ட பெண்ணின் தோற்றத்தை மாற்றி உருவாக்கப்பட்ட அந்த டிஜிட்டல் கதாபாத்திரம், அவரது சொந்தக் கொள்கைகளுக்கு முரணான கருத்துக்களைப் பரப்பியதால் தனக்கு மன உளைச்சலும் அவப்பெயரும் ஏற்பட்டதாக அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.


"தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முகத்தை மாற்றினாலும், அது தனிநபரின் அசல் அடையாளத்தையே குறிக்கும்; அனுமதியின்றி அதனைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்" என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கத்தாரில் AI மற்றும் டிஜிட்டல் அடையாளத் திருட்டு தொடர்பாக வழங்கப்பட்ட முதலாவது சட்ட முன்னுதாரணத் தீர்ப்பு இதுவாகும்.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.