கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் வழமைபோன்று மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த இரு மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நேற்று (04) விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும், தற்போது நிலைமை சீரடைந்துள்ளதையடுத்து, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
#kbknews


No comments
Thanks for reading….