இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி!

tamilsolution_ad_alt

 

இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது!

2026 அக்டோபர் 31 – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணியின் சார்பில் கமிந்து மெண்டிஸ் 131 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.

326 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

பாகிஸ்தான் அணியின் சார்பில் பக்கர் சமான் 127 ஓட்டங்களையும், சாத் பெய்க் 74 ஓட்டங்களையும், அராஃபத் மின்ஹாஸ் 61 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு முக்கிய பங்களிப்புச் செய்தனர்.

இறுதியில் ஷஹீன் அப்ரிடி அடித்த சிக்ஸர் மூலம் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியானது.

இதன் மூலம் பரபரப்பான இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

KBK NEWS | SPORTS 



No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.