இலங்கையில் அறுவடை அதிகரித்துள்ளதால் சம்பா மற்றும் நாட்டரசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 15 ரூபாவினாலும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 20 ரூபாவினலும் குறைக்கப்படுகின்றது
இதற்கிடையில், அரசாங்கத்தினால் சம்பா மற்றும் நாட்டரசியின் ஒரு கட்டுப்பாட்டு விலை நாளை முதலாம் திகதி முதல் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புத்தாண்டு காலத்தில் அரிசிக்கான விலை மேலும் குறைவடையக்கூடிய சாத்தியமுள்ளதாக விவசாய பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

