இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஓட்டமாவடி புதிய பாலத்தில் விழுந்த நிலையில் சடலம் மீட்பு

tamilsolution_ad_alt



ஓட்டமாவடி புதிய பாலத்தில் இன்று 26.09.2019ம் திகதி வியாழக்கிழமை மதியம் ஒருவர் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒட்டமாவடி – தியாவட்டுவான் அலியார் வீதியை சேர்ந்த முஹைதீன் பாவா இஸ்ஸதீன் (வயது – 54) நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் என அடையாளங் காணப்பட்டுள்ளது.
இவர் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்காக பாலத்திலிருந்து குதித்தாரா? அல்லது தவறுதலாக விழுந்தாரா? என்ற சந்தேகத்தின் பேரில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருவர் பாலத்திலிருந்து விழுவதனை அவதானித்த வாழைச்சேனை பொலிஸார் பொது மக்களின் உதவியுடன் குறித்த நபரை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே மரணித்து விட்டார் என வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பொரமுன தெரிவித்தார்.
Theme images by suprun. Powered by Blogger.