இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மொட்டு' சின்னத்தை ஏற்கவே முடியாது - ராஜபக்சக்களிடம் தெளிவாக கூறிவிட்டேன்! குருணாகலை மாநாட்டில் மைத்திரி அறிவிப்பு

tamilsolution_ad_alt

️சுதந்திரக்கட்சியின் புண்ணியத்தாலேயே மஹிந்தவும் அவரின் சகாக்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இன்று அங்கம் வகிக்கின்றனர்.

️ரணிலுக்கும் எனக்குமிடையில் தனிப்பட்ட ரீதியில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. கொள்கைக்காகவே முரண்படவேண்டிய நிலை ஏற்பட்டது.

️ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எவராலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னரும் பிளவுகளை சந்தித்திருந்தாலும் கட்சி மரணிக்கவில்லை. மீண்டெழும் சக்தி அதற்கு இருக்கின்றது.

'மொட்டு' சின்னத்தை ஏற்கமுடியாது என்பதை மஹிந்தவிடம் கூறிவிட்டேன். பொதுசின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

 நாம் வெளிநாட்டு தூதரகங்களின் ஆலோசனையின் பிரகாரம் அரசியல் நடத்தவில்லை. நாட்டுக்கு முன்னுரிமையளிக்கும் புதியதொரு அரசியல் பயணத்தை முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.

தேசிய வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டால் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோட்டாவுக்கு வாக்களிக்கலாம். ஆனால், மொட்டு சின்னத்துக்கு ஆதரவளிக்கமுடியாது. என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

குருணாகலையில் இன்று 29 நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குருணாகலை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Theme images by suprun. Powered by Blogger.