மத்திய மாகாண சமாதான நீதிவான்கள் மாநாடு ஹட்டன் டிக்கோயா அபுசாலி மண்டபத்தில் கலாநிதி பஹத் ஏ.மஜீத் அவர்களின் தலைமையில் நேற்று(02)மாலை 3.00 மணிக்கு இடம்டபெற்றது.
நிகழ்வில் பேரவையின் பொதுச்செயலாளர் தேசஅபிமானி அசுக் றிம்சாட், வடமாகாண பணிப்பாளர் சிறீமான் கணேஸ்வரன், மத்திய மாகாண பணிப்பாளர் இளங்கோ ராம், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ பவ்சில், மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எம்.முர்சித், நுவரெலிய மாவட்ட பணிப்பாளர் காமிலா அபுசாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக சேவையில் தம்மை அர்ப்பணித்த சமாதான நீதவான்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மத்திய மாகாண சமாதான நீதவான்கள் மாநாட்டில் தெல்தொட்டை பிறப்பிடமாகவும் கும்புக்கந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி முனீர் அவர்களுக்கு
கீர்திஶ்ரீ பட்டம் வழங்கி கௌவரவிக்கப்பட்டதுடன், இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் கண்டி மாவட்டத்துக்கான பணிப்பாளராக, பேரவையின் தேசிய அமைப்பாளர் DR FAHAD A MAJID அவர்களினால் நியமிக்கப்பட்டார்.



