(அபுஹின்சா)
எண்ணமே வாழ்வு என்பது எமது மக்களின் தாரக மந்திரமாகும்’ என தேசிய காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான எஸ் எம் சபிஷ். தெரிவித்தார்.
அதாஉல்லா என்ற தலைமகன் நம்மை உயர்வாக எண்ணியதன் விளைவே, நாம். நமது மண், எமது பிராந்தியம் சிறப்பான முகவரியை பெற்றுக் கொள்ள காரணமாக இருந்தது. என எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் அறிக்கையில் மேலும்,
யூத நசாராக்களின் தோழனான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியில் முஸ்லிம்கள் பட்ட வேதனைகள் போதும்.
தான் ஆட்சியை பொறுப்பெடுத்தவுடன் யூதர்களுக்கான தூதுவர் காரியாலயத்தினை இலங்கையில் நிறுவுவதற்கு அனுமதி வழங்கும்போதே நாங்கள் கூறினோம். முஸ்லிம்களுக்கு பாரியதொரு அழிவு வரப்போகின்றது என்பதனை.
இன்று உலகம் அழியும்வரை இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற முத்திரையை இந்த அரசு எம் நெற்றியிலே குத்தியுள்ளது.
இனவாதி தயாகமகே முஸ்லிம்கள் வியாபாரத்துக்காக வேளாண்மை செய்கின்றார்கள். அவர்களுக்கு நீர் வழங்காமல் சிங்கள விவசாயிகளுக்கு மாத்திரம் நீர்விநியோகம் செய்யுங்கள் என உத்தரவிட்டு எமது பொருளாதரத்தை நசுக்கினான்.
தீகவாபி தொடக்கம் பொத்துவில் வரையிலான நிலப்பரப்பு பௌத்த புனித பூமியாகும் எனக்கூறி இறக்காம பிரேதேச சபை எல்லைக்குள் பலாத்காரமாக சிலைகளை நிறுவி விகாரைகளை உருவாக்கினான்.
நாடுபூராகவும் 1200 பௌத்த சிலைகளை அமைப்பேன் என சபதமெடுத்துள்ள சஜித் பிரேமதாச கல்லிலே ஏறிநின்று படமெடுத்த எம் முஸ்லிம் மாணவர்களை, புராதன சின்னத்தை மிதித்து அவமானப்படுத்திவிட்டார்கள், அவர்களுக்கு மரணத்துக்கு மேல் ஒரு தண்டனையை வழங்கி மற்றவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என இனவாதம் கக்கினான்.
இப்படியான எண்ணம் கொண்டவர்களின் ஆட்சி இனிப் போதும்.
மஹிந்தவை பிழையாக சித்தரித்து எம்மை நம்பவைத்த மஹிந்தகூட கைவைத்திராத நமது சரியா சட்டம் மற்றும் எம் சகோதரிகளின் ஆடைகளை விமர்சித்ததுபோதும்.
வெள்ளிகிழமை பள்ளிகளுக்கு போகாமல் தவிர்ந்து கொள்ளுங்கள் எனக்கூறிய முஸ்லிம்களின் தலைவர்கள் என்று கூறுபவர்கள் எமக்கு இனித்தேவையில்லை.
அண்மையில் தலைநகரில் நாடுபூராகவும் இருந்து கலந்துகொண்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய பசில் ராஜபக்ச நாங்கள் அரசியல் ஆலோசனைகளை அதாஉல்லாவிடமிருந்து பெற்றுக்கொள்கின்றோம் என கூறினார் , அக்கரைபற்றுக்கு வருகைதந்த மஹிந்த ராஜபக்ச பிரபாகரனிடம் மண்டியிடாத முழு நாட்டுக்கும் தலைமை கொடுக்கக்கூடிய ஒரு தலைவன் அதாஉல்லா என கூறினார்.
இது எமது முஸ்லிம் மக்களுக்கு கிடைத்த கௌரவமாகும். என
தேசிய காங்கிரஸின் தேசிய இணைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

