இலங்கையின் முதல் பெண்மணி திருமதி.அயோமா ராஜபக்ஷ சென்ற வாகனத்துக்கு போக்குவரத்து போலீசார் இன்று அபராதம் விதித்துள்ளார்கள்.
திருமதி. அயோமா ராஜபக்ஷ அனுராதபுரத்தில் உள்ள பல வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்தபொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
பாதுகாப்பு வாகனம் இல்லாமல் வந்த அவரது இருந்த வாகனத்தை போக்குவரத்து விதிமீறலுக்காக பொலிஸார் நிறுத்தியபொழுது , டிரைவர் உடனடியாக திருமதி. அயோமா ராஜபக்ஷ என்ன செய்வது என்று கேட்டுள்ளார் .
சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும், அபராதத்தை பெற்றுக்கொண்டு வருமாறும் ஓட்டுனரை பணித்துள்ளார்
திருமதி அயோமா ராஜபக்ஷ வீடு திரும்பியதும் கோத்தபாய ராஜபக்சவிடம் சம்பவத்தை தெரிவித்ததும் ,
அபராதம் செலுத்தி ஓட்டுநர் உரிமத்தை பெறுமாறு ஓட்டுநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
