இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் இன்று (27) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.
வெளியான பெறுபேறுகளின்படி மூதூர் பெரியபாலம் நூராணியா பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி M.பாத்திமா முஷாதிகா விஞ்ஞானப் பிரிவில் முதற்தடவையிலேயே திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்பிடித்து (1st Rank, 2A,B) வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
குடும்ப கஷ்டத்திலும் தன்பெற்றோரின் கனவை நனவாக்கி சாதித்துக் காட்டிய மாணவி முஷாதிகா தனது ஆரம்பக்கல்வியை மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயத்திலும்,இடைநிலைக் கல்வியை அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை திருகோணமலையிலும் கற்றவராவார்.



