அபு ஹிண்ஸா
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையில் சிக்கி எம்மை விட்டு மறைந்த எமது உறவுகளை நினைத்து இறைவனிடம் கையேந்துவோம்." எனும் தொனிப்பொருளில் அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்கா வின் சமூகநல பிரிவு 15வது வருடமாகவும் ஏற்பாடு செய்த சுனாமி நினைவு நாள் நிகழ்வு சாய்ந்தமருது லீடர் MHM. அஷ்ரப் வித்தியாலய மண்டபத்தில் இன்று 2019.12.26 (வியாழன்) காலை 8.30 மணியளவில் அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்காவின் தவிசாளர் அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை சாஹிரா கல்லூரி முன்னாள் அதிபரும் அரசியல் புரட்சிகர முன்னணி தலைவருமான சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா சுனாமி நினைவு தின உரையை நிகழ்த்தினார்.
நினைவுதின உரையும் துஆ பிராத்தனையும் மாளிகைக்கடு அன் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாமும் மத்கவுன் நூர் மதரஸா அதிபருமான மௌலவி ARM. சப்றாஸ் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆனும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நினைவு தின நிகழ்வில் கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய பிரதி அதிபர் எம்.எஸ்.முபாரக், அல்- மிஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்கா வின் சமூக நல பிரிவின் தலைவர் ஆப்ரிடீன் உட்பட பலரும் அதிதியாக கலந்து கொண்டனர்.
KUMBUKKANDURA NEWS








