தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் விழா கல்முனை மாநகரில் கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
புதன்கிழமை (15) காலை 10 மணியளவில் கல்முனை பழைய பேருந்து நிலைய முன்றலில் தமிழ் இளைஞர் சேனை தலைவர்
ந .சங்கத் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ . எம் . எல் . பண்டாரநாயக்க கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் வே . ஜெகதீசன் விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ . ஜே . அதிசயராஜ் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் இரா . முரளீஸ்வரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக அம்பாறை மாவட்ட விஷேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி பிரசாத் உதேச கொடித்துவக்கு கல்முனை தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் அதிதிகளை வரவேற்றல் ,கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சேனையின் கீதம் இசைத்தல், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் ,தமிழ்த் தாய் வாழ்த்து ,ஆசியுரை ,வரவேற்புரை ,வரவேற்பு நடனம் ,தலைமையுரை, பொங்கல்பானை ஏற்றல் ,நடனம் ,விஷேட அதிதிகள் உரை, நடனம் ,அதிதிகள் உரை ,நடனம் ,பிரதம அதிதி உரை ,நன்றியுரை ,என இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Muhammed Nasim (Journalist)
Advanced Certificate in-Mass Media

No comments
Thanks for reading….