இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சஜித் தலைமையில் புதிய கூட்டணி

tamilsolution_ad_alt

செய்தியாளர் எம் ஏ எம் ரினாஸ்

வங்கி ஊழல், கட்சி முரண்பாடுகள், பதவி மோகம் மற்றும் கடந்த ஆட்சியில் சட்டத்துறையை தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் கையாண்ட விதம், ரஞ்சன் ராமநாயக்கவின் ரகசிய தொலைபேசிய உரையாடல் போன்ற பல சம்பவங்களால் திக்குமுக்காடி  போயுள்ள ஐக்கிய தேசிய கட்சி சார்ந்த புதிய கூட்டணி உருவாக்கம் இன்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் மங்கள சமரவீர தலைமையிலான
“அபே ஜாதிக பெரமுன” மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து  சஜித் பிரேமதாச தலைமையில் இதயம் ❤️ சின்னத்தில் “சமகி ஜன பலவேகய” (National Peace Alliance) எனும் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு இன்று(10) பதிவு செய்யும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு சில மாதங்களே ஆன நிலையில் பொது தேர்தலை “இதயத்தில்” எதிர்கொள்ளப்போகும் எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச பெரும்பான்மை சிங்கள மக்களின் இதயங்களை வென்றெடுப்பது ஒன்றும் சுலபமாக இருக்கப்போவதில்லை.

எனினும் மொட்டுக்கு எதிராக களமிறங்கும் இதயத்தின் துடிப்பை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இதேவேளை முஸ்லிம் கட்சிகள் எதுவும் இதுவரை இந்த புதிய கூட்டணியில் உத்தியோகபூர்வமாக இணைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.

-கும்புக்கந்துரை நியூஸ்

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.