நூருல் ஹுதா உமர்.
சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்திலுள்ள கடற்கரை பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மீனவர் சமூகத்தினரை இன்று (16) தேசிய காங்கிரசின் கல்முனை தொகுதி வேட்பாளரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்புகளின் போது கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக இருந்து மீனவ சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்தமையை மீனவர்கள் நினைவு கூர்ந்து பாராட்டினர்.
இந்த சந்திப்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




No comments
Thanks for reading….