இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் படி ( Public Security Ordinance) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்.
இதன் போது இலங்கை அரசியலமைப்பின் 14 உறுப்புரையில் குறிப்பிடப்பட்ட நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்.
மீறுவோர் மீது பிடியாணை (Warrant) இன்றி காவல் துறையினார் கைது செய்ய முடியும்.
சனாதிபதிக்கு உள்ள விசேட அதிகாரத்தின் பிரகாரம் அவசர கால நிலையை பிரகடனம் செய்து ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கலாம், அத்துடன் பிரதேசத்துக்கு பொறுப்பான Officer of In charge பொலிஸ் அதிகாரியும் தமது பிரதேசத்தின் பாதுகாப்பு, சுகாதாரம் என்பனவற்றை பாதுகாக்கும் நிமித்தம் குறித்த உத்தரவை பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையுடன் பிறப்பிக்கலாம்.
இக்காலகட்டத்தில் முப்படையினருக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன் அமைதிக்கு குந்தகம் விளைவிப்போரை கைது செய்து தடுத்து வைக்கவும், அவர்களின் உடமைகளை கையகப்படுத்தவும் முப்படையினருக்கு காவல்துறைக்கும் அதிகாரம் உண்டு .
இலங்கை வரலாற்றில் 1958 ஆம் ஆண்டு முதல் முதலில் ஊரடங்கு சட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரின் ஆட்சிக்காலத்தில் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 1977, 1983 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களின் போது அமுலாகியது, பின்னர் யுத்த காலத்தில் தொடர்ச்சியாக நாட்டின் வட கிழக்கு மாகாணங்களில் இது பரவலாக அமுலில் இருந்து வந்துள்ளது.


No comments
Thanks for reading….