இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சுகாதார தரப்பு சற்று முன்னர் விடுத்த தகவல்.

tamilsolution_ad_alt

நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சைப்பெற்றுவந்த மற்றுமொரு நபர் குணமடைந்துள்ளார்.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 
ஹோமாகம பகுதியைச்  44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
இத்தாலியில் இருந்து வருகைதந்த நிலையில் குறித்த நபர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததை அடுத்து  மார்ச் மாதம் 23 ஆம் திகதி வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நோயாளர் கடந்த 26 ஆம் திகதி  தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 
129 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , 25 பேர் இதுவரை குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.