இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பள்ளிவாசல் நிர்வாகிகள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு.

tamilsolution_ad_alt


ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்­யப்­பட்­டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களை சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின் படி நம்­பிக்­கை­யா­ளர்­க­ளாக ஏற்றுக் கொள்­ள­ப்படமாட்­டார்கள். வெறும் பரா­ம­ரிப்­பா­ளர்கள் என்ற நிலை­யிலே காணப்­ப­டு­வார்கள் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்தார்.

பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், பரா­ம­ரிப்­பா­ளர்கள் எந்த இடத்­திலும் பள்­ளி­வா­சலைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த முடி­யாது. இது போன்றே நம்­பிக்­கை­யாளர் நிய­மனம் பெற்று அது காலா­வ­தி­யான நிலை­யி­லுள்­ள­வர்­களும் நம்­பிக்­கை­யா­ளர்கள் என அழைக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்கள் பொறுப்­பா­ளர்கள் என்றே அழைக்­கப்­ப­டு­வார்கள்.

வக்பு சபையில் சட்ட ரீதி­யாக நிய­மனம் பெறா­த­வர்கள் பள்­ளி­வா­சலை நிர்­வ­கிப்­ப­தற்கு தகை­மையை இழந்து விடு­கி­றார்கள். பள்­ளி­வா­சலின் நிதி ஒரு ரூபா­வைக்­கூட செல­வ­ழிப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு அனு­மதி இல்லை. பள்­ளி­வா­சல்­களின் ஆவ­ணங்­களைக் கூட பயன்­ப­டுத்த முடி­யாது.

அவ்­வாறே வக்பு சொத்­துகள் தொடர்­பாக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களின் போது அவர்கள் ஆஜ­ராக முடி­யாது. அவர்கள் நிய­மனம் பெற வேண்டும் என்ற சட்­டத்தை மீறிய குற்­ற­வா­ளி­க­ளா­கவே கரு­தப்­ப­டுவர். இதனால் வக்பு சொத்­து­களை இழக்­கக்­ கூ­டிய நிலையும் ஏற்­ப­டலாம்.

வக்பு சட்­டத்தின் 14.1 உறுப்­பு­ரை­யா­னது பதிவு செய்­யப்­பட்ட பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நடை­மு­றை­யி­லுள்ள அதன் பழக்­கங்கள், விதிகள், ஒழுங்கு விதிகள் மற்றும் வேறு ஒழுங்கு விதி­களின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நம்பிக்கையாளர்களாக உறுதிப்படுத்தி வக்பு சபை நியமனம் வழங்கும் என தெரிவிக்கிறது என்றார்.

KUMBUKKANDURA NEWS

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.