கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, நாட்டிற்கு வருகைத் தரும் இலங்கையர்களை, தமது வீடுகளிலேயே தனிமைப் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான தீர்மானத்தை, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் 15ம் திகதி அறிவிப்பார் என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டு, இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தாது விடுவிக்க தான் யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக வம்அ வர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, விரைவில் தீர்மானமொன்றை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
KUMBUKKANDURA NEWS


No comments
Thanks for reading….