இன்று (22) நுவரெலியாவில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 3.5 பாகை செல்சியஸாக இருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரத்தில் பிராந்திய தரவு சேகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சமீப காலத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏனைய பகுதிகளில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:
பண்டாரவளை – 11.5°C
பதுளை – 15.1°C
கட்டுகஸ்தோட்டை – 15.9°C
அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலையாக முல்லைத்தீவில் 25.3°C பதிவாகியுள்ளது. அம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் வெப்பநிலை பதிவாகியிருந்தது.


No comments
Thanks for reading….