கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் இரண்டு வயது குழந்தையை விற்பனை செய்த தாய் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாய் குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளமை விசாணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தருமபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தாய் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையை பணம் செலுத்தி சட்டத்துக்கு முரணான வகையில் பெற்றுக்கொண்ட தம்பதியினரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாயின் பராமரிப்பின் கீழ் உள்ளதாக தருமபுரம் காவல்துறையினர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
குழந்தை தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் பதிவித்தனர்.


No comments
Thanks for reading….