இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பும் போது கைது செய்யப்படலாம் – ஷிரந்தி ராஜபக்ஷ முன்பிணை கோரிக்கை

tamilsolution_ad_alt

 



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், மீண்டும் இலங்கைக்கு திரும்பும்போது கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அவரது சட்டத்தரணி ஊடாக இன்று, ஒக்டோபர் 5ஆம் திகதி, இந்த முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு நிபந்தனைக்கும் உட்பட்டு தன்னை பிணையில் விடுவிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததால், குறிப்பிட்ட தினத்தில் விசாரணைக்கு ஆஜராக முடியாது என அவரது சட்டத்தரணி ஊடாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக அவர் செப்டம்பர் 16ஆம் திகதி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூரிலேயே இருப்பதாகவும், அங்கிருந்து நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்த முன்பிணை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பும் திகதி தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலேயே நாடு திரும்பும் திகதி தீர்மானிக்கப்படும் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை கோரிக்கை தொடர்பில் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.

-KBKNEWS 

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.