12.10.2026 | KBK NEWS
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று (ஒக்டோபர் 12) பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள நாவலோக தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட இதயப் பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் Daily Mirror செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவல்களை அவரது தரப்பினர் மறுத்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது இல்லத்தில் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அவரது தரப்பைச் சேர்ந்த மற்றொரு தகவல் மூலம், அவர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவே தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் நிலவி வருகின்றன.
அவரது தற்போதைய உடல்நிலை தொடர்பான உறுதியான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை உண்மையாகக் கருத வேண்டாம்.
— KBK NEWS


No comments
Thanks for reading….