இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் 63வது மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

tamilsolution_ad_alt


ஆசிய - பசிபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் (ABU) 63வது மாநாட்டின் தொடக்க விழா இன்று (01) கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

ஊடகத்துறையின் வளர்ச்சி, அறிவு மற்றும் அனுபவப் பகிர்வு, அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இம்மாநாடு ஆற்றும் முக்கிய பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

மேலும், இத்தகைய பிரம்மாண்டமான சர்வதேச மாநாட்டை இலங்கையில் வெற்றிகரமாக நடத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச ஊடகத்துறையின் ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் மேம்படுத்தும் முக்கிய தளமாக இந்த மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KBKNEWS | LOCAL

No comments

Thanks for reading….

Theme images by suprun. Powered by Blogger.